வண்டலூர் உயிரியல் பூங்காவில் நிக்கஜாம் புயலில் பாதிக்கப்பட்ட இடங்களை சீர்செய்வதற்காகவும் விலங்குகளை பராமரித்து சரிசெய்வதற்காகவும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. புயலில் பூங்காவினுள் 4 இடங்களில் சுற்று சுவர்கள் இடிந்துள்ளதாகவும் மேலும் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பூங்காவில் 30 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று புதன்கிழமை பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டு பூங்கா மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பூங்காவில் பராமரிப்பு பணிகள் முடியாத காரணத்தினால் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சாலைகளில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதால் சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 2600 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று சென்னை புறநகர் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கன மலை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் சேவைகள் நிறுத்த பட்ட நிலையில் மீண்டும் இன்று தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி பெய்த கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி ரெயில் நிலையம் வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாள பாதையில் மரங்களும் சாய்ந்தன. மழை பாதிப்பால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும், மீண்டும் 9 முதல் 16-ந் தேதி வரையும் ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த மாதத்தில் மழை பாதிப்பு தொடர்ந்ததால் 22-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 8 நாட்கள் ஊட்டி -குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. வருகிற 8-ந் தேதி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் தனித்துவ மழைக்கால மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. சிறப்பு முகாம் மூலம், புதுமணத் தம்பதிகள் மற்றும் விடுபட்ட குடும்ப உறுப்பினர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.