Chennai Rain water gets wasted at North Mada street
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது, ஸ்ரீ கபாலி கோயிலைச் சுற்றியுள்ள பல கடைகளின் கூரைகளில் இருந்து ஏராளமான நீர் வீணாகி, மாடா வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு மடா தெருவில் நடந்த காட்சி இது “இந்த கடைகளுக்கு மழை நீர் சேகரிப்பு வசதி இல்லையா?” என்று மைலாப்பூர் டைம்ஸின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த விவகாரத்தின் வீடியோ சதீஷ் ராஜமணி கருத்துரைக்கிறார்.
Read More
Chennai Chennai
இந்தியாவிலேயே முதன்முதலாக நூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் என்கின்ற பெருமை தமிழகத்தை சேரும். தமிழகத்தில் பொது நூலகத்துறையின் கீழ் கன்னிமரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,926 கிளை நூலகங்கள் 1914 ஊர்புற நூலகங்கள், 715 பகுதிநேர நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள் என 4ஆயிரத்து 603 நூலகங்கள் இயங்கி வருகிறது. இத்தனை நூலகங்கள் இருந்து என்ன பயன் மக்கள் அனைவரும் டிஜிட்டலில் முழுக்கி இருக்கும் நிலையில் நூலகம் என்பது அவசியமற்ற செயலாக தெரிகிறது. நூலகங்களை மேம்படுத்தி இணையதள வசதிகள் செய்து வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டால் நூலகங்கள் சரியான பயன்பாட்டில் இருக்கும். தற்போது அனைத்து நுலகங்களும் புத்தகங்களை பாதுகாக்கும் இடமாகத்தான் உள்ளது. இதனை மாற்ற வேண்டும். மாணவர்களுக்கிடையே நூலகத்தின் அவசியத்தை உணர்த்த வேண்டும். மாணவர்கள் உணர்ந்தால் நூலகம் சரியாக பயன்படும். மொத்தத்தில் தமிழக அரசு பொது நூலகத்துறை நூலகங்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பத் தங்கள் சேவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Read More