Breaking News
L

Local News

வசதியற்ற 100 ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை - அசத்தும் அகர்வால் மருத்துவமனை


கடந்த 1957ஆம் ஆண்டில் இருந்து, கண் பராமரிப்புச் சிகிச்சை துறையில் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இது சென்னையை அடுத்த அம்பத்தூரில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில், வசதியற்ற 100 நபர்களுக்கு கட்டணமே இல்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சையைப் பொறுத்தவரை வசதியற்ற மக்களுக்கு உதவ, பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால் தெரிவித்தார்.

Share

L

Latest Videos