Breaking News
L

Local News

ஈரானில் விமானம் விபத்தில் 11 பேர் பலி......


துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி உட்பட 11 பேர் இருந்தனர். இந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஒரு மலை மீது மோதி தீப்பிடித்தது. இந்த கோரவிப்பதில் விமானத்தில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிலிழந்தனர். பொதுமக்கள் இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற அவர்கள் 11 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அதில் 7 பேர் துருக்கி நாட்டை சேர்ந்தவர் என்றும், மினா என்ற கோடீஸ்வர பொண்ணுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் தனது தோழிகளுடன் துபாயில் ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும்போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

Share

L

Latest Videos