மத்திய பிரதேசத்தில், தேவாஸ் மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷாராம் சவுத்ரி, ௨0. இவரது தந்தை, சாலைகளை சுத்தம் செய்யும், சுகாதார ஊழியராக பணியாற்றுகிறார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த, ஆஷாராம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, எய்ம்ஸ் நடத்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுதியிறுந்தார்.
இந்த தேர்வில், அகில இந்திய அளவில், ௭0௭வது இடமும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், ௧௪௧வது இடமும் பிடித்து, சாதித்துள்ளான். ஆஷாராமுக்கு, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதைஅடுத்து, மாணவனுக்கு பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.