Breaking News திமுகவின் தேர்தல் அறிக்கை - நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து!
L

Local News

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் இன்று மோதல்!


ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதவிருக்கின்றன. 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. அபுதாபியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி (ஏ பிரிவு) போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. உலக தரவரிசையில் 97-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை நொறுக்கியது. தரவரிசையில் 79-வது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் பக்ரைனுடன் ‘டிரா’ கண்டது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் கிடைத்த பெரிய வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது எனவே, இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. ஐக்கிய அரபு அமீரக கால்பந்து சங்கம் உள்ளூர் ரசிகர்களுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க வாங்கி இருக்கிறது. எனவே உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

L

Latest Videos