Breaking News
L

Local News

தங்கம் கடத்தியவர்களுக்கு வாழை இலை சாப்பாடு!!!


ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் 186 பயணிகள் வந்தனர். இதில் வந்த பயணிகளில் 100-கும் மேற்போட்டார் தங்கம் கடத்திவருவதாக சுங்க இழக்க அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதனை விசாரிக்கும் வகையில் அனைவரையும் வரிசை படுத்தி ,பின் அவர்களது உடமைகளை கைப்பற்றி சோதனை நடத்தினர் .இச்சோதனை சுமார் எட்டு மணி நேரம் நடத்த பட்டது காலை 8 மணி முதல் 4 மாலை மணி வரை இச்சோதனை நடைபெற்றது . சோதனையின் முடிவில் 40 பயணிகள் அப்பாவிகள் என்றும் மீதமுள்ள 60 பயணிகளும் தங்கத்தை கடத்தி வரும் குருவி என அழைக்கப்படும் வேலையை செய்பவர்கள் எனும் தெரியவந்தது . இவர்கள் இந்த குருவி பணியை செய்வதற்காக அவர்களுக்கு செண்டு சாக்லேட் அவற்றை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு கூடவே தங்கம் மற்றும் ஐபோன்கள் உள்பட மின்சாதன பொருட்கள் கொடுத்து அனுப்பிருக்கின்றனர் . இவற்றை சுங்க இழக்க அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதித்தது .மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அனுப்பியது. சோதனையால் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் தங்கம் கடத்திய பயணிகள் என வித்யாசம் காட்டாமல் அனைவர்க்கும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது .இவ்வளவு எளிதாக ஒரே நேரத்தில் வரும் விமானத்தில் கடத்தல் நடந்திருப்பதால் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share

M

More News

L

Latest Videos