Breaking News
L

Local News

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனியா பைக் பயணம் - ரேஸர் சௌந்தர்யா


பாலியல் வன்முறைக்கு எதிரான பயணம்' என்ற பதாகை தாங்கிய சுஸூகி ஜிக்ஸர் SF 155 பைக் ஒருபுறம் ஒய்வெடுத்துக்கொண்டிருக்க, முகத்தில் புத்துணர்வு பொங்க வரவேற்கிறார் சௌந்தர்யா என்ற சிண்டி. சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த இவர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தம் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். 48 நாள்கள், 15,600 கி.மீ பயணம், 70,000 மக்களைச் சந்தித்திருக்கிறார். இப்பயணம்பற்றி சௌந்தர்யா ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது, ஒரு தாயாக என் மனசு பதறும். சின்னக் குழந்தைகளைக்கூட எப்படி நாசம் பண்ண முடியுது இவங்களால? நம்ம குழந்தையை எப்படி பாதுகாக்கப் போறோம், இதுக்கு என்னதான் தீர்வுனு ஆயிரம் கேள்விகள் மனசுக்குள் வந்தப்போதான், இதுக்கான தீர்வை யோசிக்க ஆரம்பிச்சேன். பொதுவாக நிறைய குடும்பங்களில் பெற்றோர்கள் பாலியல் வன்முறைகள் பற்றித் தங்கள் குழந்தைகள்கிட்ட பேசத் தயங்குறாங்க. வெளியிடங்களுக்கு விளையாட அனுமதித்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து, பிள்ளைகளை வீட்டிலேயே அடைச்சு வைக்கிறாங்களே தவிர, அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அதை எப்படிச் சாமளிக்கணும்னு பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது இல்ல. மக்கள்கிட்ட அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியா முழுக்க ஒரு பைக் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தேன். பயணத்துக்குத் திட்டமிடும்போதே, தினமும் 1,500 மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும்னு முடிவெடுத்தேன். 48 நாள்கள் பயணத்தில் 70,000 மக்களைச் சந்தித்து அது தொடர்பா பேசியிருக்கேன் என கூறினார்.

Share

L

Latest Videos