ஆஸ்கார் விருதுக்கு இருவரும் தகுதியானவர்கள்- பொம்மன்-பெள்ளி
Mar 24, 2023
சமீபத்தில் ஆஸ்கார் விருதை பெட்ரா 'எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் , தமிழ்நாட்டில் உள்ள தெப்பக்காடு யானை முகாமில் பராமரிப்பாளர்களாக பணியாற்றும் பொம்மன் பெள்ளி பற்றிய கதை.
இந்த கதையை இயக்கியவர் திரு கார்த்திகி கொன்சால்வ்ஸ். தாயை பிரிந்த யானைகளை எவ்வாறு அவர்கள் பராமரித்து வளர்த்தார்கள் என்பதும் அந்த குட்டி யானைக்கும் இவர்களுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பு என்ன என்பதும் படத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தை பாராட்டும் வகையில் தமிழக முதலைமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பொம்மன் பெள்ளியை அழைத்து தலா 1 லட்சம் உதவி தொகையை வழங்கினார் .
இந்த நிலையில் ஆஸ்கார் விருதுடன் பொம்மன், பெள்ளி இருக்கும் புகைப்படத்தை பிரபல ஓ.டி.டி தளம் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு "உலகம் முழுவதும் அன்பை பரப்பும் எலிபன்ட் விஸ்பரர்சுக்கு வாழ்த்துக்கள்'' என்று பதிவையும் பகிர்ந்து உள்ளது.ஆஸ்கார் விருதுக்கு இருவரும் தகுதியானவர்கள் என்று பலரும் பதிவுகள் வெளியிட்டு வாழ்த்தி வருகிறார்கள்.