தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டலம் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.