சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மின்சார ரயில்களில் ஏ. சி பெட்டிகளை இணைக்க பரிந்துரை செய்துள்ளது.
Oct 03, 2023
சென்னை மக்களின் அன்றாட வாழ்வில் பெரிதும் உதவியாக இருப்பது மின்சார ரயில் ஆகும். ஏனேனில் குறைந்த கட்டணத்தில் செல்லவும் விரைவாக செல்லவும் இந்த மின்சார ரயில்கள் பயன்படுத்த படுகின்றன. கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ,கடற்கரை- வேளச்சேரி, மூர்மார்கெட் –அரக்கோணம், மூர்மார்கெட்-கும்முடிபூண்டி-சூலூர்பேட்டை ஆகிய இடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களில் எல்லாம் மக்களின் வருகையை மேலும் அதிகரிக்க ஏ சி பெட்டிகளை இணைக்க வேண்டும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது இந்த ஆலோசனையை ஏற்ற தெற்கு ரயில்வே 2 முதல் 3 ஏ.சி பெட்டிகளை மின்சார ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் கடற்கரையிலிருந்து திருமால்பூர் வரை செல்லும் ரயில்களிலும் மற்றும் சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்களிலும் இந்த ஏ.சி பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது மக்களின் வருகை வைத்தே பின் அணைத்து ரயில்களிலும் இணைக்கும் பணிகளை தொடங்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.
பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் இந்த ரயில்களுக்கான ஏ.சி பெட்டிகளை தயாரிக்கின்றன.