CSK vs GT Final: 'மழையால்'...ஆட்டம் ரத்து: ரிசர்வ் டேவிலும் மழை பெய்யுமா? வானிலை நிலவரம் இதுதான்!
May 29, 2023
ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் அனைத்தும் முடிந்து, தற்போது இறுதிப் போட்டி மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.
இந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸும், 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சென்று, 10 முறை பைனலுக்கும் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இரண்டு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கிட்டதட்ட சம பலமாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில், மழை காரணமாக டாஸ் போடும் நிகழ்ந்து தாமதமாகியுள்ளது. இன்று போட்டி நடைபெறவில்லை என்றால், நாளை ரிசர்வ் டே அன்று போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று இரவு 12 மணி வரை நேரம் இருக்கிறது. குறைந்தபட்சம் 5 ஓவர்கள் போட்டியாக கூட இன்று நடத்தப்படலாம். 12 மணிக்கு மேலும் மழை பெய்யும் பட்சத்தில், ஆட்டம் நாளைதான் நடத்தப்படும் என ஐபிஎல் நிருவாகம் முடிவெடுத்து. இறுதி போட்டி இன்று அதே வெண்யூவில் நடைபெறபோகிறது.