Breaking News
L

Local News

காணாமல் போகும் தண்ணீர்


இந்தியாவில் உள்ள அணைகள் நீர் முற்றிலுமாக வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.உலகம் முழுவதிலும் உள்ள அணைகள் நீர்நிலைகளில் இருக்கும் நீரின் அளவு குறித்து செயற்கைகோள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதும் உள்ள ௫௦௦ அணைகளில் நீர்அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் விரைவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு 'டே ஜீரோ' என்ற அளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும். தட்பவெப்ப மாறுபாடு நீர் வீணடிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Share

L

Latest Videos