எலிமினேட்டர்: மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதல் – பழிவாங்குமா மும்பை ?
May 24, 2023
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் குவாலிபையர் 2ல் ஆட உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றும் குஜராத்துக்கு எதிரான குவாலிபையர் 2ல் ஆடும். அதே வேளையில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
இறுதியாக மோதிய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இன்று நடக்கப்போகும் எலிமினேட்டர் யாருக்கு சாதகமாக அமையும் என்று ஐ.பி.எல் ரசிகர்கள் அனைவருக்கும் ஆர்வமாக அமைந்துள்ளது.