Breaking News
L

Local News

பிரபல நடிகர் அஜித் குமாரின் தந்தை காலமானார்..!


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் காலமானார். சுப்ரமணியனின் வயது (84). மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share

L

Latest Videos