திரைப்பட இயக்குனர் நடிகர் எழுத்தாளருமான ஈ. ராமதாஸ் காலமானார்
Jan 24, 2023
மக்கள் ஆட்சி, சங்கம், கண்ட நாள் முதல், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வார்டு பாயாக நடித்ததைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெறத் தொடங்கி யுத்தம் செய் படத்தில் காவலராக நடித்து அதைத் தொட்ந்து காக்கிசட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக வரலாறு முக்கியம் படத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த நிலையில் ஈ. ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடல் கே. கே. நகர் முனுசாமி சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின்னர் மாலை 5 மணி அளவில் நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.