Breaking News
L

Local News

சலூன் கடையை நூலகமாக மாற்றிய கணேசன்


புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல்குடியில் 50 வயது கொண்ட கணேசன் "இந்தியன்" என்ற பெயரில் சலூன் வைத்துள்ளார். பொதுவாக சலூன்களில் வண்ண காலண்டர்கள் சினிமா போஸ்டர்கள், பெண்களின் கவர்ச்சி படங்கள் இருக்கும் ஆனால் இவரின் சலூனில் ஆயிரக்கணக்காக புத்தகங்கள் கொண்ட நூலகம் செயல்படுகிறது. இதனால் இந்த கடையை "சலூன் லைப்ரரி" என்று கூறப்படுகிறது. இதனை பற்றி அவர் "இளம் வயதில் தமிழாசிரியராக வேண்டும் என்பது என் ஆசை. எட்டாவது படிக்கும் போது,என் தந்தை இறந்து விட்டார். அவர் நடத்திய சலூன் கடையை நான் நடத்தும் சூழல் வந்தது. இதனால் பள்ளி படிப்பு பாதியிலேயே நின்று விட்டது. படிக்கிற ஆசையில் அனைத்து விதமான புத்தகங்களை அன்று முதல் இன்று வரை படித்து வருகிறேன். திறந்தவெளி பல்கலையில் எம்.ஏ வரலாறு,அண்ணாமலை பல்கலையில் பி.லிட் அஞ்சல் வழி கல்வியில் அடிப்படை இந்தி படித்துள்ளேன். தற்போது திறந்தவெளி பல்கலை மாணவர்களுக்கு, யோகா பேராசிரியராகவும் உள்ளேன். பள்ளி குழந்தைகளின் புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் திருக்குறள், நாலடியார், அவ்வையார், பாடல்கள் வாங்கி அரசு பள்ளி மாணவர்களிடம் கொடுத்து வருகிறேன் அதுமட்டுமின்றி 2011ல் "ஒற்றைக்கீற்று", 2016ல் "அவிழ்ந்தே கிடக்கும் கூந்தல்" ஆகிய இரு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு உள்ளேன் என்றும் தற்போது கல்வெட்டியல் பற்றிய பட்டய படிப்பு படிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Share

L

Latest Videos