Breaking News
L

Local News

யுவன்ஷங்கர் இசையில் கவினின் அடுத்த திரைப்படம்


லிப்ட், டாடா படத்தை தொடர்ந்து கவினின் படங்கள் அடுத்தடுத்து தயாராகி கொண்டிருக்கிறது .தற்போது கவினின் அடுத்த படத்தை 'பியர் பிரேமா காதல்' திரைப்படத்தை இயக்கிய இளன் டைரக்டு செய்கிறார். இப்படத்தின் பெயர் ஸ்டார் என பெயரிடப்பட்டிருக்கிறது இதில் இந்தி தெலுங்கு திரையுலகில் இருந்து இரண்டு பேர் நாயகிகள் மற்றும் பிரபல கேரளா நடிகர் ஒருவரும் நடிக்கிறார்கள் . இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாத்து சதவீதம் முடிவடைந்து விட்டது எனவும் அறிமுக பாடலுக்காக பிரமாண்டமான செட் அமைத்து படமாக்கி உள்ளனர் எனவும் தகவல் வெளிவந்துள்ளது மேலும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது இப்படத்தின் சிறப்பு அம்சமாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .இப்படத்தின் தயாரிப்பு பி.வி.எஸ்.என்.பிரசாத் ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரிக்கிறார்கள் மற்றும் ஒளிப்பதிவு எழில் அரசு.அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Share

M

More News

L

Latest Videos