Breaking News
L

Local News

சென்னை CMDA நிறுவனத்தில் அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


Chennai Metropolitan Development Authority (CMDA) எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி இளநிலை உதவியாளர், தட்டச்சர், களப்பணியாளர், செய்தியாளர் பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 131 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் – 34, சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III – 24, தட்டச்சர் – 10, களப்பணியாளர் – 19, செய்தியாளர் – 44 ஆகும். இந்த காலியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இளநிலை உதவியாளர் இளநிலை உதவியாளர் பணிக்கு 34 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பதவிக்கு சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கு மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தட்டச்சு பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளது. இதற்கு மாதம் ரூ.19,500 – ரூ.62,000 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தட்டச்சு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். களப்பணியாளர் பணிக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. சைக்களில் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மொத்தம் 44 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் வழங்கப்படுகிறது. மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Share

L

Latest Videos