Breaking News
L

Local News

இந்திய பங்குச்சந்தையில் வரலாற்று சாதனை


வாராக் கடன்களால் திணறிவரும் வங்கிகளுக்கு புத்துயிரூட்டும் வகையில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் அதிகளவில் ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 509.99 புள்ளிகள் உயர்ந்து 33,117.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 132.85 புள்ளிகள் உயர்ந்து 10,340.55-ஆகவும் வர்த்தகமாகின. முன்னதாக சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலை 10 மணியளவில் அந்த சாதனை சரிந்து, சென்செக்ஸ் 32,855 புள்ளிகளிலும், நிப்டி 10,256 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

Share

L

Latest Videos