Breaking News டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் !
L

Local News

இந்தியாவின் கோப்பைக் கனவு கலைந்தது: இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து


இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் சுருண்டு 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டோனி கடைசி வரை போராடினார். ஆனால் 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார். ஜடேஜா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய போது, டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா, தோனி இறுதிகட்டத்தில் போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தோனி ரன் அவுட் ஆனது விமர்சிக்கப்பட்டாலும், தொடக்க வீரர்கள் சொதப்பியதே மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

Share

L

Latest Videos