உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா- இங்கிலாந்து இன்று மோதுகின்றன !
Sep 30, 2023
இன்று கவுகாத்தியில் உலக கோப்பை ஆரம்பிக்கும் விதமாக பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவிற்காக ரோஹித் ஷர்மாவும் இங்கிலாந்துக்காக ஜோஷ் பட்லரும் தலைமை தாங்க உள்ளனர்.
இந்த ஆட்டத்தில் அணியில் உள்ள 15 பேரையும் மாற்றி மாற்றி விளையாட அனுமதி உண்டு.
கடைசி நேரத்தில் இந்தியா அணி சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணி 38 மணிநேரம் பயணம் களித்து நேற்று காலை தான் இந்தியா வந்தடைந்தது.
இரு அணியருக்கும் இந்த ஆட்டம் முக்கியமான ஆட்டமாகும் இதில் சிறப்பாக பங்குபெற்றால் உறுதியாக உலகக்கோப்பை அணியில் பங்குபெறலாம்.