Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் !


ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சை நடத்தின. மும்பை அணியில் ஒரு மாற்றமாக ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்லெனஹான் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 4-வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த அணி 2013, 2015, 2017-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்று இருந்தது. இந்த சீசனில் சென்னை அணி இறுதிப்போட்டி உள்பட 4 ஆட்டங்களில் மும்பையிடம் வீழ்ந்தது.

Share

L

Latest Videos