Breaking News புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்கள் பெயரில் பண மோசடி- உஷாராக இருக்கும்படி காவல்துறை எச்சரிக்கை ! புல்வாமா தாக்குதல்: மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை !
L

Local News

மெட்ரோ ரயிலில் செல்ல இன்று இலவசம்!!!


மெட்ரோ ரயிலில் செல்ல இன்று இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரிக்கும். 40 நிமிடங்களில் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டைக்கு செல்லலாம். மெட்ரோ ரயில் பயண வசதியை மக்களிடம் கொண்டு செல்ல இன்று இரவு (11-ம் தேதி) வரையில் மக்கள் இலவசமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யலாம். விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் - கோயம்பேடு - பரங்கிமலை என மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share

L

Latest Videos