Breaking News
L

Local News

விடுமுறையொட்டி மெட்ரோ ரயில் சேவை இன்று நீட்டிப்பு !


விடுமுறைக்காக சொந்த ஊறுகளுக்கு செல்லும் மக்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை மாற்றப்பட்டு நீடிக்கப்படுகிறது. வரும் திங்கட்கிழமை விநாயகர்ச்சதுர்த்தி என்பதால் வரஇறுதியை ஒட்டி நீண்ட விடுமுறை வருகிறது இதற்காக மக்கள் பலரும் வெளியூர்களில் இருந்து சொந்தஊர்களுக்கு செல்கின்றனர் இதற்கு உதவும் விதமாக போக்குவரத்துக்கு நெரிசல் இன்றி மக்கள் பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களுக்கு செல்லும் வசதியாக மெட்ரோ சேவை நீட்டிக்கப்போவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில், அதாவது இரவு 8 -10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் 9 நிமிடம் என்பதற்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

M

More News

L

Latest Videos