Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

நீட் தேர்வு - தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் எழுதுகிறார்கள் - கடும் கெடுபிடிகள்!


இந்த நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாமக்கல், வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழ்மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. அதனால் 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று அவரவர் இருக்கையில் அமர்வது நல்லது. ‘ஹால் டிக்கெட்’ இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள். விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத வேண்டும். 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையைவிட்டு வெளியேறக்கூடாது. ஆள் மாறாட்டத்தை தடுக்க வருகை பதிவுத் தாளில் மாணவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும். தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோ மெட்ரிக்பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட எதற்கும் அனுமதி இல்லை. மொபைல் போன், புளூடூத், பென்டிரைவ், கை கடிகாரம், கை கேமரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதி இல்லை. மென்மையான நிறத்தில் ஆடை இருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக்கூடாது. மத சார்பான அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வந்து ஆசிரியைகளின் சோதனைக்கு உட்பட வேண்டும். தேர்வு மையத்துக்குள் ஷு அணியக்கூடாது. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். அதுவும் ஹைஹீல்ஸ் உள்ளதாக இருக்கக்கூடாது. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Share

L

Latest Videos