Breaking News திமுகவின் தேர்தல் அறிக்கை - நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து!
L

Local News

வரும் கல்வியாண்டு முதல் வருகிறது புதிய பாடத்திட்டம்!


வரும் கல்வியாண்டு முதல் 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018 - 19 ம் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2019 - 20 ம் கல்வி ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி, ஏப்ரல் மாத இறுதியில் நிறைவடையவுள்ளது. மேலும் 2020 -21 ம் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2019-20 ம் கல்வி ஆண்டிலேயே, 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றம் செய்து, புதிய பாடப் புத்தகங்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டிலேயே 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Share

L

Latest Videos