Breaking News ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்!
L

Local News

தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை பிரசாரம் ஓய்வு !


தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், கடந்த ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்தனர். தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் ஒய்கிறது. நாளை மறுநாள் ( ஏப்.18) காலை ஓட்டுப்பதிவு துவங்குகிறது.

Share

L

Latest Videos