Breaking News டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் !
L

Local News

போராட்டமே வாழ்க்கை’: பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ்!


நடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை இவராவார்."நடனத்தில் தஞ்சாவூர் பாணியில் இருந்து நாங்கள் ஒருபோதும் விலகிச் செல்வதில்லை. சின்னைய்யா, பொன்னையா, சிவாநந்தம், வடிவேலு என்ற நான்கு பேர்தான் பரதநாட்டியத்தின் துவக்கத்தை விதைத்தவர்கள். இந்த நால்வரின் தலைமுறையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை. அவர்கள் வகுத்த விதியிலிருந்து நான் மாறுவதேயில்லை. அதனால்தான் எங்களது நடனத்திற்கு இப்போதும் மரியாதை இருக்கிறது" என்று சொல்லும் நர்த்தகி, நடனம் கற்றுத் தருவதற்கு வெள்ளியம்பலம் நடன கலைக்கூடம் என்ற அறக்கட்டளையையும் வைத்திருக்கிறார். மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் திருநங்கை என்ற வார்த்தையும் நர்த்தகியின் உருவாக்கம்தான்.

Share

L

Latest Videos