Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

எல்லையில் பாக்கிஸ்தான் அத்துமீறல்


சில​ நாட்களாக, பாகிஸ்தான் ராணுவம், எல்லை காட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 4 இந்திய வீரர்களும், பொது மக்களும் பலியாகியுள்ளனர்.சிலர் காயமடைந்துள்ளனர். இதனை கண்டிக்க இந்திய ராணுவத்தின் போர் நடவடிக்கைகளுக்காக லெப்டினன் ஜெனரல் ஏகே பட், பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை ஹாட் லைனில் அழைத்து பேசியுள்ளார். அந்த​ உரையாடலில் ஜெனரல் ஏகே பட், பாகிஸ்தான் அதிகாரியிடம், எல்லையில் நடக்கும் அனைத்து அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு உரிமையும் உள்ளது. எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது. இதற்கு பாகிஸ்தானும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடுருவல் சம்பவங்கள் நடப்பதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஆதரித்து வந்தால், உரிய​ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Share

L

Latest Videos