Breaking News திமுகவின் தேர்தல் அறிக்கை - நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து!
L

Local News

பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூரு எடுத்து செல்வதில் சிக்கல்!


திருவண்ணாமலையை அடுத்து வந்தவாசியிலுள்ள கொரகோட்டையில் 64 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான பெருமாள் சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. இச்சிலை பெங்களூரிலுள்ள ஈஜிபுரா எனும் இடத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது, முழுமையாக செதுக்கப்படாததால் மிகப்பெரிய பாறையுடன் 360 டயர்கள் கொண்ட பிரமாண்ட சரக்கு லாரியில் கடந்த மாதம் 7 -ம் தேதி புறப்பட்ட இச்சிலை பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு, திருவண்ணாமலை வந்தடைந்தது 2 நாட்களுக்கு முன்பு கிரிவலப்பாதையில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பெங்களூரு பயணிக்கிறது, வழியில் ஏராளமான பக்தர்கள் பெருமாள் சிலையை வழிபட்டனர். இதற்கிடையில் அம்மாபாளையத்திலிருந்து சிலை நேற்று புறப்படத்தயாராகும்போது வண்டியின் 15 சக்கரங்கள் பழுதாகின மாற்று சக்கரங்கள் மும்பையிலிருந்து வரவேண்டியுள்ளது. எனவே சக்கரங்கள் கொண்டுவரப்பட்டு சிலை புறப்பட மேலும் 2 நாட்கள் ஆகுமென தெரியவருகிறது.மேலும் அம்மாபாளையத்தில் சாலைசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் சிலை திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து செல்ல சிக்கல்கள் உள்ளன.

Share

M

More News

L

Latest Videos