மக்களின் ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் கோரிக்கை - வரும் ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது
Mar 20, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவை ஏற்று கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.