Breaking News
L

Local News

தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை !


தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமல்லாது, 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் அளவுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் தற்போது அமலில் இருந்துவருகிறது. ஆனால், பட்டப்படிப்பை தமிழில் படித்தால், இந்த 20 சதவீத முன்னுரிமை பிரிவில் இடம்பெற்றுவிட முடியும்.

Share

L

Latest Videos