Breaking News
L

Local News

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் - சூரியின் கொட்டுக்காளி !!!


நடிகரும் , தயாரிப்பாளரும் ஆன சிவகார்த்திகேயன் கனா திரைப்படத்தில் தொடங்கி நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா , வாழ் , மற்றும் பல படங்களை SK புரொடக்ஷன் மூலம் தயாரித்து உள்ளார். இதனை தொடர்ந்து தனது நண்பரும் சகோதரர் என்று அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியை வைத்து கொட்டுக்காலி எனும் படம் தி லிட்டில் வேவ் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்து வருகிறார் . இந்தப் படத்தை `கூழாங்கல்' படத்தின் மூலம் சர்வதேச கவனம் பெற்ற பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்த பரோட்டா சூரி , வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இனி வரும் காலத்தில் கதையின் நாயகனாக மட்டும் தான் நடிப்பாரா?

Share

L

Latest Videos