Breaking News
L

Local News

மோடிக்கு பெரியார் புத்தகத்தை பரிசளிக்கப்போகிறேன் - தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பஞ்ச் !


பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரியார் புத்தகங்களை பரிசளிக்கப்போவதாக தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ஏற்பதும், விடுவதும் தமிழக அரசின் விருப்பம் என கூறியுள்ளோம். எதையுமே தமிழகத்தின் மீது நாங்கள் திணிக்க மாட்டோம். ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் கொள்ளைக்கார வரியை விதித்தார். 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது உலகில் எங்குமே இல்லாதது. நரேந்திர மோடி செய்த அத்தனை நடவடிக்கைகளும் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தின. தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆட்சி நடத்த விரும்புகிறார் மோடி. தமிழகத்தின் வரலாறு மோடிக்கு தெரியவில்லை என்பதே இதற்கு காரணம். எனவே நான் பெரியார் பற்றிய, புத்தகங்களை நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளேன். கருணாநிதி பற்றிய புத்தகங்களையும் கொடுக்கப்போகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டை பற்றி அப்படியாவது மோடி தெரிந்து கொள்ளட்டும். தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக மக்கள் தங்களை யாரும் அடக்கியாள விட்டதில்லை. உலகத்தில் எந்த சக்தியாலும், தமிழர்கள் விரும்பாததை செய்ய வைக்க முடியாது என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பாலும், கோபத்தாலும், தமிழர்களை எதுவும் செய்ய முடியாது. அன்பாலும், நட்பாலும் அவர்களை எதையும் செய்ய முடியும்.

Share

L

Latest Videos