Breaking News ஜம்மு -காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் புதைந்தனர்! புதுசேரியில் தனியார் ஸ்கேன் மையத்தில் 2 -வது நாளாக வருமானவரி துறை சோதனை! தமிழக அமைச்சரவை தொடங்கியது! காணும் பொங்கல் : புதுச்சேரி கடலில் குளிக்க தடை! மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு இன்று திறப்பு! நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு!
L

Local News

ரிக்ஷ ஓட்டுனர் 9 பள்ளிகளை திறந்து வைத்துள்ளார்.


அசாம் மாநிலத்தில் ரிஷா தொழிலாளி ஒருவர் குடும்ப சூழ்நிலையால் கல்வி பயில முடியாமல் இளம் வயதிலேயே ரிக்ஷ ஓட்டத் துவங்கினார். கல்வி மீது இவருக்கு தீராத தாகத்தால், எந்த ஒரு ஏழை குழந்தையும் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணிய இவர் ஏழை குழந்தைகளுக்காக பள்ளியை கட்ட முடிவு செய்தார். ஆனால் அவரிடம் பள்ளி கட்டும் அளவிற்கு போதிய பணமில்லாமல் தனது சொந்த நிலத்தை விற்று மேலும் கிராம மக்களிடம் இருந்து பணம் சேகரித்து.1978 ஆண்டு முதன் முறையாக ஏழை குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை திறந்தார். இவர் கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் தனது பகுதியில் 9 பள்ளிகளை திறந்துவைத்துள்ளார். இவர் 3 ஆரம்ப பள்ளிகளையும்,5 ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நடுநிலை பள்ளிகளையும்,ஒரு உயர்நிலைப்பள்ளிகளையும் கட்டி உள்ளார். விரைவில் ஒரு கல்லூரியும், கட்ட இருக்கிறார். அவர் " படிப்பறிவின்மை எந்த ஒரு சமூகத்திற்கும் சாபக்கேடு. இதனால் வாழ்வதற்கான ஆதாரமே இல்லாமல் போகும். மேலும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கை தரம் உயர்த்துவதே எனக்கு திருப்தி என்று கூறுயுள்ளார்.

Share

L

Latest Videos