Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல் !


பெங்களூரு அணி 12 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. டெல்லிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் பெங்களூரு அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது. எனவே எஞ்சிய ஆட்டங்களில் நெருக்கடி இல்லாமல் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முயற்சிப்போம் என்று அந்த அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். ராஜஸ்தான் அணி 12 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அத்துடன் அடுத்த சுற்றுக்குள் நுழைய மற்ற அணிகளின் ஆட்ட முடிவும் அந்த அணிக்கு சாதகமாக அமைய வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்திதால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும். இதனால் அந்த அணிக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஸ்டீவன் சுமித்துக்கு இது தான் கடைசி ஆட்டமாகும். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில்விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Share

L

Latest Videos