Breaking News
L

Local News

ரயில் மேம்பாலங்களை சீரமைக்க சச்சின் ரூ.2 கோடி நிதி


மஹாராஷ்டிர மாநிலத்தில், கடந்த மாதம், மும்பை, எல்பின்ஸ்டோன் நடை மேம்பால விபத்தில், 23 பேர் பலியாகினர். ஆகையால் மும்பை, ரயில் நிலைய நடைமேம்பாலங்களை சீரமைக்க, இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மாவட்ட கலெக்டருக்கு எழுதிய​ கடிதத்தில் கூறியுள்ளதாவது: எல்பின்ஸ்டோன் ரோடு ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில், அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். பொறுப்பான குடிமகன் என்ற முறையில், இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதிருக்க, நடைமேம்பாலங்களை சீரமைக்க, எம்.பி., நிதியில் இருந்து, வடக்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேக்கு, தலா, ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share

L

Latest Videos