Breaking News
L

Local News

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து, நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு.. அதிமுகவிற்கு அடியா!


விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது, இத்தீரிப்பைப்பற்றி அமைச்சர் பாண்டியராஜன், நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம் இது. சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கான பயண தூரத்தை குறைக்கும். செங்கம் போன்ற இடங்களில் தொழில்வளர்ச்சியை பெருக்கும். சேலத்தின் வளர்ச்சிக்கு ஒர் உந்துசக்தியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடங்கினோம், என்றார். இந்த தீர்ப்பைக் கொண்டு எங்கள் கட்சி மீது விழுந்த அடியா, மக்கள் மீது விழுந்த அடியா அல்லது வளர்ச்சி மீது விழுந்த அடியா என யூகிக்க நான் விரும்பவில்லை. இது நல்ல எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம். எதிர்க்கட்சிகள் சொல்வது போல பெரிய திட்டம் கொண்டுவந்தால், ஊழலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் இதை செய்தோம் என்பது கிடையாது. நாங்கள் மனவருத்தம் அடையவில்லை,என்று கூறினார்.

Share

L

Latest Videos