Breaking News திமுகவின் தேர்தல் அறிக்கை - நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து!
L

Local News

சென்னையில் சமத்துவ பொங்கல் - சேலை, பாவாடை தாவணியில் கல்லூரிமாணவிகள் கொண்டாட்டம்!


கிராமபாரம்பரியமான பொங்கல் திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அனைவரும் சமம் எல்லோரும் ஒற்றுமையாக பொங்கல் விழாவை கடைபிடிக்கும்விதமாக சென்னையில் கல்லூரிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் மற்றும் அரசுநிறுவனங்களிலும் கடந்த சிலவருடங்களாகவே சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் படி சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லுரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவிகள் பாவாடை தாவணி, சேலையில் வந்து அசத்தினார்கள். கிராமபுரத்தை போன்ற சூழல் கல்லூரிவளாகத்தில் உருவாக்கப்பட்டு பொங்கல் பானை வைத்து பொங்கல் வழிந்து வரும்போது அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என கூக்குரலெழுப்பினர். இதில் மாணவிகளும்,பேராசிரியர்களும் கலந்துகொண்டு நம் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் சிலம்பாட்டம் ஆகியவைகளை நிகழ்த்தியுள்ளனர். மாட்டுவண்டியில் ஏறி கல்லூரிவளாகத்தை சுற்றி வந்தனர், மேலும் மாணவிகள் வண்ண வண்ண கோலமிட்டும், திருவிழா காலங்களில் கிராமப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை போல இங்கேயும் கடைகள் அமைத்து இளநீர், பஞ்சுமிட்டாய், மக்காசோளம், பணியாரம் போன்றவைகளை மாணவிகளே தயாரித்து விற்பனை செய்தனர். மாணவிகள் இதுபற்றி கூறுகையில் இன்றைய தொழில்நுட்பவளர்ச்சியில் அனைவரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற விழாக்கள் எங்களை புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

Share

M

More News

L

Latest Videos