Breaking News
L

Local News

துாக்கு தண்டனையின் போது டாக்டர்கள் உடனிருக்க​ வேண்டும்?


'துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, டாக்டர்கள் உடனிருக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்' என, இந்திய டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தலைவர், கே.கே. அகர்வால், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஒருவருடைய துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, டாக்டர்கள் உடனிருப்பது, மருத்துவ நியதிகளுக்கு எதிரானது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், உயிரைப் பறிக்கும்போது உடனிருக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும். இந்த​ நடைமுறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க​ வேண்டும் என்று எந்த​ கடிதத்தில் எழுதியுள்ளார்.

Share

L

Latest Videos