Breaking News வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்! தமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது
L

Local News

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!


2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும். காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்கு சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

Share

L

Latest Videos