Breaking News
L

Local News

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது: தேர்ச்சி விகிதம் 95.2% !


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இதில், 95.2 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 93.3 சதவீதமாகவும்,மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது. 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Share

L

Latest Videos