Breaking News
L

Local News

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைப்பு தமிழக மக்கள் அதிர்ச்சி !


கடந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பால் விலை குறைப்பால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு, 44 ரூபாய் என நிர்ணயம்செய்யப்பட்டது. இது, 500 மி.லி., 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆவின் நிர்வாகம் கூறியவாறு இந்த விற்பனையால் ஏழு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது இதை காரணம் காட்டி, நேற்று முதல் பச்சைநிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆவின் பாலகங்களுக்கு, 50 சதவீதம் சப்ளை குறைக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, ஊதா நிற பசும்பால் பாக்கெட் அனுப்பப்பட்டது. ஒரு வாரத்திற்குள் பச்சை நிற பால் பாக்கெட் முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கேன்டீன்களுக்கு, 5 லிட்டர் பால் பாக்கெட் வழக்கம்போல இரவு நேரத்தில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது, என ஆவின் நிருவாகம் கூறியுள்ளது

Share

M

More News

L

Latest Videos