இறந்தவரை எடுத்து செல்ல பணம் கேட்ட மருத்துவர் - இறந்தவரே எழுந்ததால் பரபரப்பு
Feb 13, 2023
பகதூர் சிங் என்பவர் பஞ்சாப்பில் ஹோசியார்பூர் மாவட்டத்தில் நங்கால் ஷாகீத் கிராமத்தில் வசித்து வருபவர் .இவர் சில தினங்களாக இருமல் தோற்றால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார், திடிரென்று சுவாசிக்க முடியாமல் சிரம பட்டவுடன் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி ஐ.வி .ஒய்.. எனும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் மோசமான நிலைமையில் இருக்கிறார் என்று கூறி ஐ சி யூ விற்கு அழைத்து சென்று மூன்று மணி நேர சிகிச்சைக்கு பின்னர் பகதூர் சிங் உயிர் இழந்துவிட்டார் என மருத்துவர் கூறியுள்ளார் .
அதனால் சிகிச்சைக்கு உண்டான தொகையை செலுத்தி விட்டு பிணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறிய நிலையில் பகதூர் சிங் கால்கள் லேசாக ஆடியுள்ளது , உடனே வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து பகதூர் சிங்க்கு சிகிச்சை பார்த்தவுடன் அவர் குணம் அடைந்தார் .
இந்நிலையில் உறவினர்கள் உடன் சேர்ந்து பகதூர் சிங்கும் ஐ.வி .ஒய். மருத்துவமனைக்கு அளித்த உரிமத்தை கேன்சல் செய்யுமாறு போராட்டம் நடத்தினர்.