Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது !


காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து அதிகாலை 5.30 மணியளவில் கோவில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த 5 தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.

Share

L

Latest Videos