கூகிள் அலுவலகத்தில் வெடிகுண்டு என போதையில் உளறிய மது பிரியர் அதிர்ச்சி அடைந்த போலீஸ்.
Feb 13, 2023
மும்பையில் உள்ள புனே நகரில் அமைந்துள்ள கூகிள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுபற்றி மண்டலம் ௫-ன் காவல் துணை ஆணையாளர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து புனே நகரில் உள்ள கூகிள் அலுவலகம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது .நள்ளிரவில் இருந்து போலீசார் தேடியும் வெடிகுண்டு ஒன்றும் கிடைக்கவில்லை அதனால் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வதந்தி எனவும் அந்த தகவலை கொடுத்த நபரை போலீசார் ட்ரஸ் செய்தனர்.
கூகிள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய நபர் ஹைதெராபாத்த்தில் இருப்பதாகவும் அந்நபர் மது அருந்திவிட்டு போதையில் உளறியதாகவும் தெரியவந்தது.
இது பற்றி மும்பையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.