Breaking News
L

Local News

குஜராத் தேர்தலுக்கான​ தேதி இன்று அறிவிப்பு


நவம்பர் 9 ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கான ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 18 ல் துவங்கும் என தேர்தல் கமிஷன் கூறி உள்ளதால்,இம்மாதத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க​ வேண்டும். மேலும் இந்த ஆண்டு டிசம்பர் 31 க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க வேண்டும் என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், இன்று இடைத் தேர்தலுக்கான​ தேதியும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

L

Latest Videos