Breaking News
L

Local News

கட்டிடத்தில் மீண்டும் தீ மக்கள் வெளியேற்றம்


பிரபல துணிக்கடையான​ தி சென்னை சில்க்ஸில் நேற்று ஏற்பட்ட​ தீ விபத்து காரணமாக கட்டிடம் மிகவும் ஆபத்துக்கு உள்ளான​ நிலையில் உள்ளது. தற்போது அந்த​ கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்துள்ளது.இன்று காலை தீ மீண்டும் கொழுந்து விட்டு எரிகிறது.இதனால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் எரியும் தீயை அருகில் வசிப்போர் மேல்தளங்களில் இருந்து பார்க்க வேண்டாம் என அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.போலீசார் அறிவுறுத்தலின் பேரில் சென்னை சில்க்ஸ் அருகில் அடுக்குமாடி குடியிருப்புக்களில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Share

L

Latest Videos