Breaking News
L

Local News

பழைய​ ரூபாய் நோட்டுகளை மாற்ற​ கால​ அவகாசம் கிடையாது


கடந்த வருடம் நவம்பர் மாதம் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு வெளியிட்டது. இந்த நோட்டுகளை 2016 டிசம்பர் 31 வரை வங்கிகளில் செலுத்தி மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட காலத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாதவர்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தது. இந்நிலையில்,தற்போது இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் உறுதிச் சான்று தாக்கல் செய்துள்ளது.அதில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கினால், அது தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.எந்த​ நோக்கத்தில் இத்திட்டம் நிறைவேற்றப் பட்டதோ அது வீணநிவிடும்.மேலும் பழைய நோட்டுகளை சட்ட விரோதமாக விற்பனையும் செய்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

L

Latest Videos